விரைவில் நயன்தாரா திருமணம்... அஜித், விஜய்க்கு அழைப்பு
நடிகை நயன்தாரா திருமணத்துக்கு அஜித்துக்கும் விஜய்க்கும் அழைப்பு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara - vignesh shivan
நானும் ரவுடி தான் படத்தில் துவங்கிய காதல் கதை தற்போது திருமணத்திற்கு வந்துள்ளது. நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே காதால் மலர்ந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது திருமண குறித்து ரசிகர்கள் உட்பட கோலிவுட் வட்டாரமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபகாலமாக இவர்களது திருமணம் குறித்த செய்து காட்டு தீயாய் பரவி வருகிறது.
nayanthara -vignesh shivan
நட்சத்திர ஜோடிகளான இவர்களது திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி நடைபெற இருப்பதாகவும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெறுவதாக வேறொரு செய்தியும் உலா வருகிறது. அண்மையில் ஒரு விருது நிகழ்ச்சியில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த தேதியை குறிப்பிட்டு, திருமணம் அன்று தானே என கேட்க, அதற்கு விக்கியும், நயனும் மறுப்பு தெரிவிக்காமல் வெட்கப்பட்டு சிரித்தனர்.
nayanthara - vignesh shivan
இதற்கிடையே தங்களது திருமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெற விக்கி மற்றும் நயன்தார குலா தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்த காட்சிகளும் இருவரும் இணைந்து கறிவிருந்து சாப்பிட்ட வீடியோவும் வைரலானது. இதனையடுத்து திருமணம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
nayanthara - vignesh shivan
இந்நிலையில் நயன்தாரா- விக்கி திருமண அழைப்பிதழ் தமிழ்முன்னணி நாயகர்களான அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இவ்விருவருடனும் அதிக திரையை பகிர்ந்து கொண்ட நயன்தார திருமணத்துக்கு அஜித், விஜய் கட்டாயம் வருவார்கள் என சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளதால் அஜித் வரவும் கட்டாயமாக நிகழும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.