MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நரசிம்மாவில் விஜயகாந்திற்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தது எப்படி? உண்மையை பகிர்ந்த நடிகர் வேணு அரவிந்த்!

நரசிம்மாவில் விஜயகாந்திற்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தது எப்படி? உண்மையை பகிர்ந்த நடிகர் வேணு அரவிந்த்!

Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind : நரசிம்மா படத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தது எப்படி என்ற உண்மையை நடிகர் வேணு அரவிந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 07 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind

Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind

Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind : இயக்குநர் திருப்பதிசாமி இயக்கத்தில் விஜயகாந்த், இஷா கோப்பிகர், ரகுவரன், நாசர், ரஞ்சித், ஆனந்தராஜ், சந்திரசேகர், வடிவேலு, தலைவாசல் விஜய், வேனு அரவிந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் நரசிம்மா. விஜயகாந்த் தனது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த படத்தை தயாரித்திருந்தார். மணி சர்மா தான் படத்திற்கு இசை.

பயங்கரவாத கும்பலின் தலைவர் இறந்த பிறகு புதிய தலைவரான ரசூல் அக்தர் இந்தியாவை அழிக்க விரும்பி 20 இந்திய வீரர்களை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்து விடுகிறார். இதற்கிடையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலக கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்த விஜயகாந்த் (கேப்டன் நரசிம்மா) அங்கிருந்து தப்பிக்கும் போது பாதுகாப்பு அமைச்சர் ராணா (ரகுவரன்) மற்றும் மற்ற அதிகாரிகளால் விஜயகாந்த் கைது செய்யப்படுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Captain Vijayakanth

Captain Vijayakanth

போலீஸ் விசாரணையில் விஜயகாந்திடமிருந்து உண்மையை வரவழைக்க பல விதமான டிரீட்மெண்ட் செய்கிறார்கள். ஆனால், எதற்கும் விஜயகாந்த் அஞ்சவில்லை. அதில் ஒன்று தான் ஷாக் டிரீட்மெண்ட். இதையடுத்து அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற விஜயகாந்த் ஒவ்வொரு டானையும் கொலை செய்கிறார். கடைசியில் விஜயகாந்தை பற்றி தெரியவருகிறது. அவர், யார், எதற்காக டான்களை எல்லாம் கொலை செய்தார் என்பது பற்றிய படம் தான் நரசிம்மா.

இந்த நிலையில் தான் இந்தப் படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகர் வேணு அரவிந்த் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தது பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட ஷாக் டிரீட்மெண்ட் பற்றியும் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது தான் எனக்கு ஏவிஎம் தயாரிப்பில் வாழ்க்கை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிப்பதை பார்த்த இயக்குநர் திருப்பதிசாமியின் சகோதரி என்னை அழைத்து அவரது அண்ணனிடம் சொல்லி, விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்தார். அப்படி நடித்த படம் தான் நரசிம்மா.

35
Narasimha Shock Scene

Narasimha Shock Scene

அந்த படத்தில் நான் கேப்டன் விஜயகாந்திற்கு ஷாக் கொடுப்பது போன்று ஒரு சீன். அதில் நெருப்பு பொரி அவர் மீது தெரிப்பது போன்று ஒரு காட்சி. அந்த காட்சியில் நான் விஜயகாந்த் அணிந்திருக்கும் ஹெல்மேட் மீது வைக்க வேண்டும். நான் புது நடிகர். அதோடு ஸ்டண்டும் தெரியாது. ஆனால், கேப்டன் விஜயகாந்துக்கு இது புதுசு அல்ல. எல்லா ஸ்டண்ட்ச் காட்சிகளிலும் நடித்துவிட்டார். இருந்தாலும் என்னைப் பார்த்து, புது பையன் என்பதால் கொஞ்சம் பயந்து விட்டார்.

45
Vijayakanth Narasimha Shock Scene

Vijayakanth Narasimha Shock Scene

அதன் பிறகு அவரே இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். கிராஸ் லெக் புட் நடங்க என்றார். அந்த ஒரு சீன் மட்டுமே 4 டேக் எடுக்கப்பட்டது. ஏனென்றால் நான் நடக்கும் போது என்னுடன் கேமரா மேனும் வர வேண்டும். 2ஆவது டேக்கில் நான் நெருப்பை எடுத்துக் கொண்டு அவருக்கு அருகிலேயே சென்றுவிட்டேன். எனினும் அது கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துவிட்டது என்று கூறியுள்ளார். கடைசியாக விஜயகாந்தின் கண்ணுக்கு ஒரு பவர் இருக்கும். இதை அவரிடம் நான் சொன்னேன். அவரும் சிரிச்சுக்கிடே சென்றுவிட்டார். விஜயகாந்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஐ மிஸ் யூ கேப்டன் என்று பகிர்ந்துள்ளார்.

55
Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind

Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind

நடிகர் வேணு அரவிந்த், சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிலாபெண் என்ற தொடரிலும், சிவமயம், காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், காதல் பகடை, அலைகள், ஆடுகிறான் கண்ணன், வாணி ராணி, சந்திரகுமாரி என்று பல தொடர்களில் நடித்துள்ளார். இப்போது ராதிகா நடித்து வரும் தாயம்மா குடும்பத்தாரில் நடித்து வருகிறார். இதே போன்று, முத்து எங்கள் சொத்து, அந்த ஒரு நிமிடம், பகல் நிலவு, படிக்காத பண்ணையார், நரசிம்மா, வல்லவன், சபாஷ் சரியான போட்டி, ஓ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved