ஒரே வண்ண உடையில்.. மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய விஜயகாந்த்...
தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள் விஜயகாந்த் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

vijayakanth family
மூன்று தலைமுறை ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்து வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவரது பல படங்களும் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருந்தது. கிராமத்து இளைஞனாக கோலிவுட்டில் அறிமுகமான விஜயகாந்த் அசைக்க முடியாத பிம்பமாக இருந்து வந்தார்.
vijayakanth family
பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கிய அரசியலுக்கு சென்ற இவர் இரு முறை தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இது அரசியலிலும் பின்னடைவை கொடுத்தது. அதோடு விஜயகாந்த் உடல்நிலையும் சரியில்லாமல் போகவே தொடர்ந்து சரிவை சந்தித்தார்.
vijayakanth family
இதற்கிடையே சமீபத்தில் விஜயகாந்தின் இரு விரல்களும் ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த செய்தி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு மிடுக்கான தோற்றத்துடன் வலம் வந்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மனதை உறுக்கி வருகிறது.
vijayakanth
தற்போது விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஒரே வண்ண உடையில் நால்வரும் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது மகன் சண்முகபாண்டி நாயகனாக அறிமுகம் ஆகிவிட்டார், அவர் தற்போது மித்ரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு ஒரு பிள்ளை அரசியலுக்கு ஒரு பிள்ளை என விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள் விஜயகாந்த் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
vijayakanth family
மூன்று தலைமுறை ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்து வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவரது பல படங்களும் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருந்தது. கிராமத்து இளைஞனாக கோலிவுட்டில் அறிமுகமான விஜயகாந்த் அசைக்க முடியாத பிம்பமாக இருந்து வந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.