விஜய் டிவி சீரியல் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்..! பிரமாண்டமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..!
பொதுவாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்தாலே, வெள்ளித்திரை வாய்ப்பு கூட பலருக்கு மிக விரைவில் கிடைத்து விடுகிறது.
அந்த வகையில், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், பிரியா பவானி, தீனா, என சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி விஜய் டிவியில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் இருந்து வெளியேறிய பின் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தவர் சைத்ரா ரெட்டி.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'யாரடி மோகினி' என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலருமான ராகேஷ் சமலா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ராகேஷ் சமலா, ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் ஆவர். இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.