விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை..!! என்ன ஆச்சு தெரியுமா?
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடியால் பலரை சிரிக்க வைத்த மணிமேகலை திடீர் என விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது.
முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விரைவில் 3 ஆவது சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிகழ்ச்சியை கூடுதல் சிறப்பாக்குவது குக்குகளை விட கோமாளிகள் தான். குறிப்பாக கோமாளிகளான புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் தங்களுடைய தனி ஸ்டைலில் செஃப் முதல் குக்குகள் வரை சரமாரியாக கலாய்த்து தள்ளுவார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக விஜய் டிவியில் தற்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுத்துள்ள, மணிமேகலை திடீர் என விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மணிமேகலை புதிய BMW கார் வாங்கினாலும், தங்களுடைய பழைய காரில் கணவன் மனைவி இருவரும் ஒரு லாங் டிரைவ் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது கார் ஒரு லாரி மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மணிமேகலை மற்றும் ஹுசேனுக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை என்றாலும் கூட, காருக்கு மட்டும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மணிமேகலை ஒரு விபத்தில் சிக்கினார். அதை தொடர்ந்து மீனும் 2021 ஆம் ஆண்டு இப்படி ஒரு விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.