15 வயதில் திருமணம்; சில வருடத்தில் இறந்த கணவர்! கைவிட்ட 2-ஆவது கணவர்! விஜய் டிவி சீரியல் நடிகையின் கண்ணீர் கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நடித்து வரும் பானுமதி... ஷகிலா எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய கண்ணீர் கதையை கூறியுள்ளார்.
Banumathy Painful life
பொதுவாகவே பிரபலங்களின் பர்சனல் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதில் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் பிரபலங்களை சுற்றி உள்ள ஒரு கண்ணாடி பிம்பம் போன்ற வாழ்க்கை தான். ஆனால் அவர்களின் நிஜ வாழ்க்கைக்குள் சென்றால் மட்டுமே அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வலி வேதனைகள் பற்றிய பின்னணி நமக்கு தெரியவரும்.
Banumathi films and Serials
அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் பானுமதி. தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் சீரியலில் பார்ப்பதற்கு அழகானவராகவும் பணக்கார பெண் போல் தெரிந்தாலும் நிஜத்தில் இவர் வாழ்க்கையில் சூழ்ந்திருப்பது அதிகமான கஷ்டங்கள் மட்டுமே.
காண்டம் வாங்கி வா.. கட்டாயப்படுத்திய நகுல்! அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரால் வெளியேறிய நடிகை?
Banumathi open up interview
ஏற்கனவே இவர் ரிஹானா பேட்டி கண்டபோது, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து, ஷகிலா பிரபல யூ டியூப் தளத்திற்கு இவரை பேட்டி கண்டுள்ளார். அப்போது நெஞ்சில் பூட்டி வைத்திருந்த பல தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். பானுமதி, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தானாம். சிறு வயதில் மேடைகளில் நடனமாட இவருக்கு பிடிக்கும் என்பதால், ஒரு மேடையில் டான்ஸ் ஆடியபோது... இவரின் கணவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க, பெற்றோரும் சம்மதம் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
Shakila interview
திருமணத்தின் போது தனக்கு 15 வயது என்றும், தன்னுடைய கணவருக்கு 25 வயது என கூறியுள்ள பானுமதி, அவரை திருமணம் செய்த பின்னர் குடும்பத்தை தவிர வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் 10 வருடங்கள் ஓடிவிட்டது. தன்னுடைய கணவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும்... குடித்து குடித்து உடல்நிலை மோசமாகி அவர் 35 வயதிலேயே இறந்து விட்டார். என் கணவர் இறந்ததற்கு நான் தான் காரணம், அவர் என்னால் தான் இறந்தார் என... என்னுடைய மாமியார் வீட்டில் கூறினார்கள்.
22 வருடம் ஆகிடுச்சா? வைரலாகும் அஜித் - ஷாலினி திருமண அழைப்பிதழ்!
Chinnamarumagal serial Fame
இதுபோன்ற வார்த்தைகள் மனதளவில் என்னை மிகவும் பாதித்தால் ஒருபோதும், எதற்காகவும் அவர்களிடம் சென்று நிற்க கூடாது என நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆரம்பத்தில் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல், நல்ல உடை இல்லாமல், குழந்தைகளை படிக்க வைக்க என எல்லா வற்றிக்கும் ஓடினேன். என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்ள ஒரு ஆண் இல்லை, நான் தான் என்னுடைய இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து, தற்போது என் அம்மா - தங்கையையும் பார்த்து கொள்கிறேன்.
Banumathi Second Marriage:
என் மகன் இன்ஜினீரில் முடித்துள்ளான் என கூறி ஷகிலாவையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் பானுமதி. பின்னர் தன்னுடைய இரண்டாவது கணவர் பற்றி பேசிய பானு... ஒரு ஆண் துணை வேண்டும் என இரண்டாவதாக ஒரு திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. அவர் மிகவும் நல்லவர் தான் ஆனால் அந்த வாழ்க்கையும் நிலைக்க வில்லை. என்னுடைய குடும்பம் சராசரியான ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான். மற்றவர்கள் படும் கஷ்டங்களை விட அதிகமாகவே நான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன் என கூறியுள்ளார். ஷகிலா நீ இரண்டு பிள்ளைகளையும்... நன்றாக படிக்க வைத்தன் மூலமே ஒரு தாயாக நீ சாதித்து விட்டாய் என பானுவை பார்த்து பெருமையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு நடந்த வளைகாப்பு! குவிந்த பிரபலங்கள்!