Thalapathy 66 Update : ‘தளபதி 66’ படத்துக்கு டயலாக் ரைட்டர் இவரா?.... அப்போ அரசியல் வசனமெல்லாம் தீயா இருக்குமே
தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளனர். திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தால் வருகிற தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் கூறி இருந்தார்.
தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 66 படத்துக்கு ராஜு முருகன் டயலாக் ரைட்டராக பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழில் ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
பொதுவாகவே இவரது படங்களில் அரசியல் வசனங்கள் தீயாக இருக்கும். தற்போது தளபதி 66 படத்துக்கு இவர் வசனம் எழுத உள்ளதால், அரசியல் டயலாக்குகள் இப்படத்தில் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.