MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!

2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!

இந்த ஆண்டு வெளியான டாப் ஹீரோக்களின் படங்களில் அதிகம் வசூல் செய்த 6 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

3 Min read
Author : manimegalai a
Published : Nov 11 2024, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Goat Movie

Goat Movie

கோட்:

தளபதி விஜய் நடிப்பில், செப்டம்பர் 5ஆம் தேதி இந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.

இரட்டை வேடத்தில் நடித்திருந்த தளபதிக்கு விஜய்க்கு ஜோடியாக, இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம். அஜ்மல், அமீர், வைபவ், யோகி பாபு, பிரேம் ஜி அமரன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், மொத்தம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vettaiyan

Vettaiyan

வேட்டையன்:

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'வேட்டையன்'. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு, அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். மேலும் அமிதாபச்சன், பகத் ஃபாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.292 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

இளையராஜா - கமல் கூட்டணியில் உருவான 5 எவர்கிரீன் காதல் பாடல்கள்!

36
Thangalaan:

Thangalaan:

தங்கலான்:

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்த நிலையில், மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.102 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

46
Indian 2

Indian 2

இந்தியன் 2:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சுமார் 26 வருடங்களுக்கு பின்னர் இரண்டாம் பாகமாக ஜூலை 12ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'இந்தியன் 2. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், கமலஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக மிரட்டி இருந்த இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் இரண்டு மற்றும் மூன்றாவது பாகமாக ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ரூ.150 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

திருமணத்திற்கு முன்பே அக்ஷயாவுக்கு கண்டீஷன் போட்டு கஷ்டப்படுத்தினாரா நெப்போலியன் மகன் தனுஷ்?

56
Dhanush Raayan

Dhanush Raayan

ராயன்:

நடிகர் தனுஷ் நடித்து - இயக்கி இருந்த திரைப்படம் 'ராயன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜூலை 26 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ராயன்'. ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், சுமார் ரூ.160 கோடி வசூலை ஈட்டியது.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், தனுஷ் நடித்திருந்த இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, தசரா விஜயன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

66
Amaran Movie

Amaran Movie

அமரன்:

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சிவகார்த்திகேயன் முத்து வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பத்து நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டுமா? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா இதுவரை வாங்கிய சம்பவம் எவ்வளவு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்த்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved