இளையராஜா - கமல் கூட்டணியில் உருவான 5 எவர்கிரீன் காதல் பாடல்கள்!
இளையராஜா மற்றும் கமல் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், எவர்கிரீன் பாடலாக இருக்கும் 5 பாடல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Ilayaraja and kamal
திரைப்படங்கள் ஒரு முறையோ இருமுறையோ பார்க்கப்பட்டாலும், அதில் இடம்பெறும் பாடல்கள் பல முறை ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. பல படங்களில் வெற்றிக்கு அதில் இடம்பெறும் பாடல்களும் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். இப்படி எண்ணிக்கை வரையறையை கடந்து ரசிக்கப்பட்ட இளையராஜா - கமல் காம்போவில் உருவான காதல் பாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Devar Magan
தேவர்மகன்:
இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், கமல் - சிவாஜி கணேசன் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேவர் மகன்'. இந்த படத்தில் கமல் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரேவதி நடிக்க, இரண்டாவது நாயகியாக கௌதமி நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, 'தேவர் மகன்' படத்தை கமல்ஹாசன் தயாரித்தும் உள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும், வாலி எழுத்தில் கமல் மற்றும் ஜானகி பாடிய 'இஞ்சி இடுப்பழகி' பாடலுக்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
திருமணத்திற்கு முன்பே அக்ஷயாவுக்கு கண்டீஷன் போட்டு கஷ்டப்படுத்தினாரா நெப்போலியன் மகன் தனுஷ்?
Sathyaa Movie
சத்யா:
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்யா. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், அமலா கதாநாயகியாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற வலையோசை பாடல், பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இந்த பாடலின் ரெபெரென்ஸ் காட்சியை, காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பயன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamalhaasan Evergreen Songs
மைக்கில் மதன காமராஜன்:
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், கமல்ஹாசன் ஸ்கிரீன் பிளே எழுதி, ஹீரோவாக நடித்த திருப்பிடம் மைக்கில் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக குஷ்பூ, ஊர்வசி, ரூபிணி ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுமை மற்றும் ஆக்க்ஷன் அதிரடி காட்சிகளோடு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற இந்த படத்தில், நாகேஷ், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
1990-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இளையராஜா இசையில், இடப்பெற்ற அணைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், பஞ்சு அருணாச்சலம் மற்றும் பூவாச்சல் காதர் எழுதிய 'சுந்தரி நீயும்' சுந்தரன் நானும் பாடல்... ஏதாவது ஒரு மலையாள பெண்ணை காதலித்தால் அவருக்கு இப்போது கூட தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் Coad Word போல் இந்த பாடல் உள்ளது.
எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா இதுவரை வாங்கிய சம்பவம் எவ்வளவு?
Guna Movie
குணா:
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவினாலும்.... மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பின்னர் அதிகப்படியான 2கே கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்ட படம் தான் 'குணா'. இயக்குனர் சந்தான பாரதி இயக்கிய இந்த திரைப்படம், 1991-ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த நடிகை ரோஷ்ணி நடித்திருந்தார். இப்படத்தில் வாலி வரிகளில், கமல்ஹாசன் மற்றும் எஸ்.ஜானகி குரலில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' என தொடங்கும் பாடல், தற்போது வரை அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
Moonram Pirai
மூன்றாம் பிறை:
பாலு மகேந்திரா இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்று தான் 'மூன்றாம் பிறை'. இந்த படத்துக்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றார். இந்த படத்தில் கண்ணதாசன் வரிகளில்... கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய, 'கண்ணே கலைமானே' பாடலை கேட்டாலே மனதின் உள்ளே காதலின் வைப் வருவது போல் இந்த பாடல் அமைத்திருக்கும். இந்த பாடல்கள் அனைத்துமே... கமல் - இளையராஜா காம்போவில் வெளியான தனித்துவமான காதல் பாடல்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 6 மாசத்துல தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவோம் - நெப்போலியன் ஓபன் டாக்