- Home
- Cinema
- சோலோவாக ரூ.100 கோடி குவித்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு புதிய அஸ்திவாரம் போட்ட விஜய் சேதுபதி!
சோலோவாக ரூ.100 கோடி குவித்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு புதிய அஸ்திவாரம் போட்ட விஜய் சேதுபதி!
Thalaivan Thalaivii Total Box Office Collection : விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி தலைவன் தலைவி ரூ.100 கோடி வசூல்
Thalaivan Thalaivii Total Box Office Collection : மகாராஜா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் ரூ.100 கோ வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜ சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் தான் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, ரோஷினி ஹரிப்ரியா, தீபா சங்கர், மைனா நந்தினி, காளி வெங்கட் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
தலைவன் தலைவி ரூ.100 கோடி வசூல்
முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கணவன் மற்றும் மனனவிக்கிடையிலான சண்டைக் காட்சிகள், மாமியார் மற்றும் மருமகள் உறவு ஆகியவற்றை பிரதிபலித்தது. குடும்பத்தில் அடிக்கடி கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு தனது வீட்டிற்கு செல்வதும், பின்னர் கணவர் சமாதானப்படுத்தி கூட்டி வருவதும் அதன் பிறகு விவாகரத்து வரை செல்வது தான் இந்தப் படத்தோட கதை.
இதில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கணவன் மனைவியாக நடித்து தங்களது இயல்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலேயும் முக்கியமாக படத்திற்காக விஜய் சேதுபதி புரோட்டா போடவும் கற்றுக் கொண்டுள்ளார். இதனை அவரே ஒரு இண்டர்வியூவில் கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதி, நித்யா மேனன்
இந்த நிலையில் தான் கடந்த ஜூலி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான தலைவன் தலைவி படம் ஒரு மாதத்திற்கு பிறகு ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குடும்பங்களின் விருப்பமான தலைவன் தலைவி படம் உங்களது முடிவில்லா அன்பு மற்றும் ஆதரவுடன் உலகளவில் ரூ.100 கோடி வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ரூ.100 கோடி வசூல் குவித்த தலைவன் தலைவி
இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வந்த மகாராஜா படம் மட்டுமே ரூ.100 கோடி வசூல் குவித்து புதிய சாதனை படைத்திருந்தது. அதன் பிறகு இந்த படம் தான் சோலோவாக ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தப் படம் ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
இதே போன்று ஜவான், விக்ரம், பேட்ட போன்ற படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த படங்கள் தான். ஆனால், இந்தப்படத்தில் விஜய் சேதுபதி லீடு ரோலில் நடிக்கவில்லை. எனினும், அவரும் ஒரு பகுதியாக நடித்திருந்தார்.