நிம்மதியா சந்தோஷமா வாழ விஜய் சேதுபதி சொன்ன ஐடியா; சூப்பர்னு பாராட்டும் நெட்டிசன்கள்!
Vijay Sethupathi New Idea for Peaceful Life : Peaநிம்மதியாக வாழ விஜய் சேதுபதி சொன்ன ஐடியாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijay Sethupathi Viduthalai 2 Release
Vijay Sethupathi New Idea for Peaceful Life : புதுப்பேட்டை படத்தின் சாதாரண நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபது. இன்று தன்னோட படத்தின் மூலமாக சீனாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் அளவிற்கு சினிமா மூலமாக உயர்ந்து நிற்கிறார். ஆம், விஜய் சேதுபதியின் மகாராஜா படம் சீனாவில் நேற்று வெளியானது. முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.10 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதோடு சீனாவின் முக்கியமான முன்னணி விமர்சனமான Douban என்ற வெப்சைட்டில் மகாராஜா படத்திற்கு 10க்கு 8.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
Vijay Sethupathi Advise
ஒரு சாதாரண நடிகராக ஆரம்பித்து இன்று உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை உயர்த்தியுள்ளார். எளிமையான தோற்றம், வெளிப்படையான பேச்சு, எதார்த்தமான குணம் என்று எல்லாவற்றிலும் தான் ஒரு சூப்பர் ஹீரோ என்று விஜய் சேதுபதி நிரூபித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை 2 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Vijay Sethupathi Upcoming Movies
இந்தப் படத்தைத் தொடர்ந்து காந்தி டாக்கீஸ், ஏஸ் (ACE), டிரைன் என்று பல படங்களில் நடித்து வருகிறார். இதில், ACE படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Vijay Sethupathi
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இளையராஜா உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் நிம்மதியா வாழ விஜய் சேதுபதி சொன்ன ஐடியாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijay Sethupathi Filmography
அப்படி என்ன ஐடியா சொன்னாரு கேட்குறீங்களா, ஒருவரை அழிக்க நினைத்தால் அவருக்கு 3 வேளை சோறு மட்டும் போட்டு நீ எதுவும் பண்ணாது என்று சொல்லுங்க. மூளைக்கு வேலையே இருக்காது. பைத்தியம் பிடிச்சிடும். கடைசியில் அவனே செத்துடுவான். சம்பளன் கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால், மூளைக்கு மட்டும் எந்த வேலையும் கொடுக்காமல் இருந்துவிடக் கூடாது. மூளை வேலை செய்து கொண்டே இருந்தால் தான் நிம்மதி என்று கூறியுள்ளார்.