Vijay Sethupathi: தன்னை விட 6 வயது மூத்த நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி !
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தன்னை விட வயதில் மூத்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இளம் வயது நடிகைகளுக்கு ஜோடி போட ஆர்வம் காட்டும் நடிகர்கள்:
சில முன்னணி நடிகர்கள், சமீப காலமாக தங்களின் மகள் வயது நடிகையோடு ஜோடி போடுகிறார்கள் என்கிற சலசலப்பு ஒரு பக்கம் சினிமாவை ஆட்டி படைத்தது வரும் நிலையில்... இவர்களில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி சற்று வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறார்.
Vijay Sethupathi Reject Movie
க்ரிதி ஷெட்டிக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி:
நடிக்க க்ரிதி ஷெட்டி விஜய் சேதுபதி தனக்கு அப்பாவாக 'உப்பென்ன' படத்தில் நடித்திருந்தாலும், நான் அவருடன் ஜோடி போட தயாராக இருக்கிறேன் என கூறினார். ஆனால் என்னால் மகளான நடித்த ஒருவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என கூறியது அவர் மீதான மரியாதையை அதிகரிக்க செய்தது.
Vijay Sethupathi New Pair:
தன்னை விட 6 வயது மூத்த நடிகைக்கு ஜோடி:
தற்போது தன்னை விட 6 வயது மூத்த நடிகைக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. கமர்ஷியல் இயக்குநர் என பெயர் எடுத்து பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக அறிவித்தார். அவரின் கனவு படமாக உருவாகும் இந்த படம், பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை? அந்த ஹீரோயின் யார் தெரியுமா?
Vijay sethupathi Movie new Director
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர்:
யுகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின், தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.
Tabu roped in for Vijay Sethupathi, Puri Jagannadh’s next big project
பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்கிறார்:
இந்த படத்தில், விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் உணர்வுப்பூர்வமான கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர் தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகும் நிலையில்... இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. கூடிய விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லங்கமான இயக்குனரின் படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறாரா விஜய் சேதுபதி?