- Home
- Cinema
- ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனா நடிக்க விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தால் ஜெர்க் ஆன பாலிவுட் தயாரிப்பாளர்கள்
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனா நடிக்க விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தால் ஜெர்க் ஆன பாலிவுட் தயாரிப்பாளர்கள்
Vijay Sethupathi : அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருவதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவர் தற்போது தெலுங்கில் தயாராகும் புஷ்பா 2 படத்திலும், இந்தியில் உருவாகும் ஜவான் படத்திலும் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
தான் ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடிக்கும் படங்களுக்கு அதிக மவுசு இருப்பதை உணர்ந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனது சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தி விட்டாராம். அதுவும் இந்தியில் அவர் நடித்த படங்கள் ஒன்றுகூட இன்னும் ரிலீசாகாத நிலையில், ஜவான் படத்திற்கு அவர் கேட்டுள்ள சம்பளம் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மோடியும், ஸ்டாலினும் ‘வாவ்’ என வியந்து பாராட்டிய செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா வெற்றியடைய காரணம் இந்த இயக்குனரா?
அதன்படி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.30 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதாலில் ராணா தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக இருந்தது. அவர் வேறு படங்களில் பிசியானதால் விஜய் சேதுபதியை தற்போது கமிட் செய்துள்ளது படக்குழு.
ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.