விஜய் சேதுபதி மகள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு கிடு கிடுவென வளர்ந்து விட்டார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தாற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர். வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இவருடைய மகன் சூர்யா 'நானும் ரவுடி தான்' படத்தில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'சிந்துபாத்' படத்தில் பல காட்சிகளில் தன்னுடைய தந்தையுடன் தோன்றினார்.
சமீபத்தில் கூட இவர், மானாட மயிலாட கோகுலுடன் சண்டை காட்சியில் நடித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது. மேலும் 'சிந்துபாத்' படத்தில் பார்த்ததை விட, நன்கு வளர்த்திருந்தார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மட்டும் அல்ல அவரது மகள் ஸ்ரீஜாவும் நெடு நெடுவென நன்கு வளர்ந்து விட்டார். இவர் தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தாற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்பதில், சிறுமியாக பார்த்த ஸ்ரீஜா-வா இது? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.