- Home
- Cinema
- Slum Dog : விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் பட கதை இதுதானா? டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா..!
Slum Dog : விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் பட கதை இதுதானா? டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா..!
Slum Dog Teaser Decoding : பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Slum Dog Teaser Decoding
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் உருவாகும் பான்-இந்தியன் படமான "ஸ்லம் டாக்" டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. "33 டெம்பிள் ரோடு" என்பது இந்தப் படத்தின் டேக்லைன். பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரில் ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோள்ள ஆகியோருடன் இணைந்து இந்தப் பிரம்மாண்ட படத்தை தயாரிக்கின்றனர். சம்யுக்தா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஸ்லம் டாக் கதை என்ன?
ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு டீசர் மிரட்டலாக இருக்கிறது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு மாஸ் மற்றும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தோன்றுகிறார். சுமார் ஒன்றேகால் நிமிடம் ஓடும் இந்த டீசரின் முக்கிய சிறப்பம்சமே விஜய் சேதுபதியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான். ஒரு காட்சியில் பார்வையற்றவராகவும், மற்ற காட்சிகளில் சாதாரணமாகவும் விஜய் சேதுபதி தோன்றுவது படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. டீசரில் வரும் வசனங்கள் மூலம், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தக் கதை அமைந்திருக்கும் என யூகிக்க முடிகிறது.
கவனம் பெறும் டீசர்
முன்னதாக வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. படத்தின் கதையை இயக்குநரே எழுதியுள்ளார். ஆக்ஷன், எமோஷன், மாஸ், இசை, காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக, தனது கரியரின் மிகப்பெரிய படமாக பூரி ஜெகன்நாத் 'ஸ்லம் டாக்'கை உருவாக்கியுள்ளார் என்பதை டீசர் காட்சிகள் உறுதி செய்கின்றன.
பாலிவுட் நடிகை தபு மற்றும் கன்னட நடிகர் விஜய் குமார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் குமார் இதில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும், சரீனா வஹாப், பிரம்மாஜி, விடிவி கணேஷ் ஆகியோரும் தங்களது நகைச்சுவையான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்', 'அனிமல்' போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த இவர், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்.
ஸ்லம் டாக் படக்குழு
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்து மொழிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியன் படமாக இது வெளியாக உள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள்: எழுத்து, இயக்கம் - பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் - பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோள்ள, பேனர் - பூரி கனெக்ட்ஸ், ஜேபி மோஷன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவு - சாம் கே. நாயுடு, இசை - ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், எடிட்டர் - சந்தோஷ் நூசிலா, கலை இயக்குநர்கள் - ஆஷிஷ் தேஜா, ஜானி ஷேக் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

