- Home
- Cinema
- Thalapathy 66 : விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா... பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - வைரலாகும் போட்டோஸ்
Thalapathy 66 : விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா... பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - வைரலாகும் போட்டோஸ்
Thalapathy 66 : தளபதி 66 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
தற்காலிகமாக தளபதி 66 என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகி உள்ளார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. அதேபோல் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்க உள்ளார் தமன்.
இந்நிலையில், தளபதி 66 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர். தளபதி 66 படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... samantha : நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.