- Home
- Cinema
- samantha : நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா
samantha : நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா
samantha : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்தாண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை சமந்தா கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர இந்தியில் தயாராகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
அதே போல் நாக சைதன்யாவும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இந்தியில் நடித்துள்ள லால் சிங் சட்டா திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக டோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அவர்கள் நடிக்கும் படத்தை ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பின்னரும் நடிகர் நாகசைதன்யாவை நடிகை சமந்தா சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்ந்து வந்ததால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து நாகசைதன்யாவை பின் தொடர்வதை நிறுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சமந்தா.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர்கள் இருவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான மஜிலி என்கிற திரைப்படம் 3 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக அந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில் நாக சைதன்யாவுடன் நடிகை சமந்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... AR Murugadoss :மீண்டும் ஃபார்முக்கு வந்த ஏ.ஆர்.முருகதாஸ்! அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களின் படங்களை இயக்குகிறார்