- Home
- Cinema
- அட்லீக்கு அடித்த லக்.... மீண்டும் பிகில் கிளப்ப தயாராகும் மெர்சல் கூட்டணி - ‘தளபதி 68’ பற்றிய மாஸ் தகவல் இதோ
அட்லீக்கு அடித்த லக்.... மீண்டும் பிகில் கிளப்ப தயாராகும் மெர்சல் கூட்டணி - ‘தளபதி 68’ பற்றிய மாஸ் தகவல் இதோ
விஜய் - அட்லீ கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு வசூலையும் வாரிக்குவித்தன.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் இதன் ஷூட்டிங் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது.
இதையடுத்து தளபதி 68 படத்தில் விஜய்யும் அட்லீயும் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல் பரவி வந்த நிலையில், அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ‘நோ’ சொன்ன ராஷ்மிகா... மாஸ்டர் நடிகையை மாஸாக களமிறக்கிய பா.இரஞ்சித்
தற்போது ஷாருக்கானின் ஜவான் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அட்லீ. இப்படத்தை முடித்த பின்னர் தான் தளபதி 68 படத்துக்கான பணிகளை தொடங்க இருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு இறுதியில் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணைய உள்ளனர்.
ஏற்கனவே விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு வசூலையும் வாரிக்குவித்தன. இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதால் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... அடக்கொடுமையே... ‘வாரிசு’ படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக் ஆனது - படக்குழு அதிர்ச்சி