விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார்! அன்று கலைஞரே ஆச்சரியப்பட்டார்? அரிய தகவலை பகிர்ந்த நடிகர் சரத்குமார்!
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் விஜய் தான் தற்போதைய 'சூப்பர் ஸ்டார் 'என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள, 'வாரிசு' திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா... இன்று மிகப் பிரமாண்டமாக நடந்து வருகிறது.
தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள, இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று 'சூரிய வம்சம்' படத்தின் 175 ஆவது நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்து விட்டதாகவும், விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார். நான் அப்போது இதை சொன்ன போது, கலைஞர் கருணாநிதி கூட ஆச்சரியப்பட்டார் என அரிய தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் விஜய்யின் வாரிசு படத்தில், விஜய்க்கு தந்தையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில்.. நடிகர் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் சரத்குமாரின் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது போலவே, வாரிசு படத்திலும் சரத்குமார் ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய கதாபாத்திரத்தையே தேர்வு செய்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.