MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆத்தி.. இத்தனை கோடியா! தளபதி 68 படத்துக்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் விஜய்.. எவ்வளவு தெரியுமா?

ஆத்தி.. இத்தனை கோடியா! தளபதி 68 படத்துக்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் விஜய்.. எவ்வளவு தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 19 2023, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

24

லியோ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அதற்கு விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்துக்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து கசிந்த வண்ணம் உள்ளன. அதன்படி விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளாராம். இப்படத்தை லவ் டுடே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஏற்கனவே பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் சிவன் குறித்து எழுந்த சர்ச்சை கேள்விக்கு... அன்றே சத்குரு அளித்த சாமர்த்திய பதில்

34

இந்நிலையில், தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்க உள்ள சம்பளம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதன்படி தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்க ஏஜிஎஸ் நிறுவனம் முன்வந்து உள்ளதாம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பட்டியலில் ரஜினியை முந்தி நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் உருவெடுத்துள்ளார்.

44

விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை ஆகும். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படம் தோல்வியடைந்தபோதும், அவருக்கு நடிகர் விஜய் வாய்ப்பளித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் மங்காத்தா, மாநாடு போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வெங்கட் பிரபு இயக்கி உள்ளதால், விஜய் படமும் அந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்...  ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargirathu: அமுதா கொலை? கைதான ஜனனி தப்பியோட்டம்! ஆதிக்கம் செலுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் கதையில் அடுத்த திருப்பம் என்ன?
Recommended image2
Draupathi 2: தடையை தாண்டி வசூல் வேட்டையாடும் திரௌபதி 2.! அனல் பறக்கும் விமர்சனமும் வசூல் கணக்கும்!
Recommended image3
Rachitha Mahalakshmi : சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறாக போஸ் கொடுத்த ரச்சிதா.. எப்படி இருக்காங்க பாருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved