52வது திருமண நாளுக்காக காதல் மனைவி ஷோபாவுக்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த எஸ்.ஏ.சி!
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய காதல் மனைவி ஷோபாவுக்காக காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

SA Chandrasekhar Gifted a Costly Car to his wife Shoba : தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான். மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய்க்கு சினிமாவின் மீது தான் ஆசை இருந்ததால், அடம்பிடித்து சினிமாவுக்குள் வந்தார். விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த படங்களையெல்லாம் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கி வந்தார்.
SA Chandrasekhar - Shoba
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
நடிகர் விஜய்யை ஒரு நடிகனாக மெருகேற்றியதில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எஸ்.ஏ.சி சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியது எஸ்.ஏ.சி தான். இவர் கடந்த 1973-ம் ஆண்டு ஷோபா சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். இதில் விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!
SA Chandrasekhar - Shoba 52nd Wedding Anniversary
52வது திருமண நாளை கொண்டாடும் எஸ்.ஏ.சி - ஷோபா ஜோடி
எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா ஜோடி கடந்த 1973-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு திருமணமாகி 52 ஆண்டுகள் ஆகிறது. நாளை இருவரும் 52வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய காதல் மனைவி ஷோபாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வழங்கி இருக்கிறார். அதன்படி பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை தான் எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய மனைவிக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.
SA Chandrasekhar Gift to Shoba
மனைவிக்கு எஸ்.ஏ.சி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.ஏ.சி, கல்யாணம் ஆகி தனக்கு 52 ஆண்டுகள் ஆகிறது, இந்த 52 வருடத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ டார்ச்சர்... அத்தனையும் தாங்கிட்டு ஒரு பொண்ணு என்னோட வாழ்ந்திருக்கிறாள். கல்யாண புதிதில் மனைவிக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று, ஆனால் இந்த 52வது திருமண நாளுக்காக என் மனைவிக்கு ஒரு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறேன். பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் காரை பரிசாக் கொடுத்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு என எஸ்.ஏ.சி அந்த வீடியோவில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Vijay : புஸ்ஸி ஆனந்த் சகவாசம் விஜய்க்கு நல்லதல்ல... என் மகனோட எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு - SAC குமுறல்