Vijay Fans: ஏழைகள் பசி தீர்க்க விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் செயல்..! வைரலாகும் புகைப்படங்கள்...
தளபதி விஜய் ரசிகர்கள் ஏழைகளின் பசியை தீர்க்கும் விதமாக, நடமாடும் விலையில்லா உணவகம் மூலம் சாப்பாடு கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கோலிவுட்டின் பிளாக் பஸ்டர் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். வீட்டில் சுட்டிக் குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை விஜய்யை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
ரசிகர் மன்றமாக மட்டுமில்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதை உணர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு பேரிடர் காலங்களில் சமூக சேவையாற்றிய வருகின்றனர்
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது களத்தில் இறங்கி சேவையாற்றினர். இதுமட்டுமின்றி வெள்ளம், புயல் என தமிழகம் பேரிடர் காலங்களை சந்தித்த பல்வேறு சமயங்களிலும் விஜய் ரசிகர்கள் மக்களோடு மக்களாக இறங்கி சேவையாற்றியுள்ளனர்.
விஜய் பட அப்டேட் வெளியானால் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவது முதல் தளபதியை பற்றி தப்பாய் பேசினால் சோசியல் மீடியாவில் கண்டன குரல் எழுப்புவது வரை தளபதி ரசிகர்கள் வேற லெவல்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றதும், உடனடியாக மக்கள் பணியிலும் இறங்கினார். மேலும் தளபதி விஜய்யும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆதரவாக அவர்கள் மக்கள் பணியாற்ற உதவி வருகிறார்.
இதை தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்கள், தற்போது ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக, நடமாடும் விலையில்லா உணவகம் ஒன்றின் மூலம் சேவை செய்ய துவங்கி உள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர்களுடைய சேவை பணியை சமூக வலைத்தளத்திலும் பலர் பாராட்டி வருகிறார்கள்.