Rashmika dating : மும்பையில் பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற ராஷ்மிகா.... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா (Rashmika), தற்போது பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.
குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
இவர்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர் விட்டு பொங்கி வழிந்து கொண்டிருப்பதாக சில கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும், இருவருமே தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இருவரும் ஒரே நேரத்தில் பாரிஸுக்கு சுற்றுலா சென்ற விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் (Vijay Deverakonda) ஒன்றாக டின்னர் டேட்டிங் சென்றதாக பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேறி ஒன்றாக காரில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.