கோடி கோடியாய் வசூல் குவிக்கும் மார்கன் – 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Maargan Box Office Collection Day 2 Report : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் மார்கன் படம் 2ஆவது நாளில் கோடிக்கணக்கில் வசூல் குவித்துள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மார்கன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 2ஆவது நாள்
Maargan Box Office Collection Day 2 Report : இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர்களில் நடிகர் விஜய் ஆண்டனியும் ஒருவர். பிச்சைக்காரன் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவான மார்கன் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் ஆண்டனி தயாரித்த மார்கன்
இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியான படம் தான் மார்கன். இப்படத்தில் அஜய் திஷான் என்கிற புதுமுக நடிகர் வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரிகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. விஜய் ஆண்டனி கெரியரிலேயே அதிக திரைகளில் ரிலீஸ் ஆன படம் இதுதானாம்.
மார்கன் மூவி ரெவியூ
மார்கன் திரைப்படத்தை சுமார் 1000 திரைகளில் ரிலீஸ் செய்திருந்தனர். மார்கன் படத்தை பொருத்தவரை ரசாயன ஊசி செலுத்தி அடுத்தடுத்து இளம் பெண்களை டார்கெட் செய்து மர்ம கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலையாளியை பிடிக்க விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி.
மார்கன் வசூல்
அவர் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தாரா என்பதை பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சொல்லி உள்ள திரைப்படம் தான் இந்த மார்கன். வழக்கமான கிரைம் திரில்லர் கதைபோல் இல்லாமல் இதை இயக்குனர் லியோ ஜான் பால் வித்தியாசமாக கையாண்டு இருக்கிறார். இதனால் மார்கன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விஜய் ஆண்டனியின் மார்கன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
மார்கன் திரைப்படத்தை சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்கள். இப்படத்திற்கு முதல் நாளில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நேற்று மட்டும் மார்கன் திரைப்படம் இந்தியாவில் ரூ.85 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளது. உலகளவில் ரூ.1 கோடி வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் மார்கன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 லட்சம் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.
மார்கன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில் தான் மார்கன் படம் 2ஆவது நாளில் மட்டும் ரூ.1.41 கோடி வசூல் குவித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளில் ரூ.85 லட்சம் வசூல் குவித்த இந்தப் படம் 2ஆவ்து நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று இப்போது ரூ.1.41 கோடி வசூல் குவித்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி வெளியான இந்தப் படம் இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 2 நாட்கள் வசூலை விட கூடுதலாக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குபேராவை ஓரங்கட்டிய மார்கன்
தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சேகர் கம்முலா இயக்கிய இப்படம் தமிழ்நாட்டில் பிளாப் ஆனாலும் தெலுங்கு மாநிலங்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது. மார்கன் படத்தின் வரவால் தமிழ்நாட்டில் குபேரா படத்திற்கான திரையரங்க எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி இப்படம் நேற்று தமிழ்நாட்டில் வெறும் 22 லட்சம் தான் வசூலித்து இருக்கிறது. ஆனால் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆன மார்கன் திரைப்படம் இதைவிட டபுள் மடங்கு வசூலித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.