அப்பா விஜய்யை மிஞ்சிய மகன் சஞ்சய்... பாட்டியை இழந்து வாடும் ஏ.ஆர்.ரகுமான் மகனுக்காக செய்த காரியம்...!
கடந்த சில தினங்களுக்கு முன்பு . ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டுமல்லாது ஹாலிவுட் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டி, ஆஸ்கர் விருதுகள் மூலமாக தமிழர்களை தலை நிமிரவைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருடைய தாயார் கரீமா பேகம் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கரீமா பேகம் மரணமடைந்தார்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு சோசியல் மீடியா மூலமாக ஆறுதல் கூறினர். இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனுடன், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது. பாட்டியை இழந்த சோகத்தில் இருக்கும் அமீனை தொடர்பு கொண்டு சஞ்சய் ஆறுதல் கூறியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் அதிக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு . ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.