அரசியலுக்கு வந்தே ஆகணும்! ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய் - அஜித் ரசிகர்கள்!
First Published Jan 10, 2021, 12:52 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு, இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு தெரிவித்த போதிலும், இவரது அரசியல் வருகைக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள் இன்று தங்களுடைய அறப்போராட்டம் மூலம் தலைவருக்கு அரசியல் அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி ரசிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் இந்த போராட்டத்திற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு, டிசம்பர் 31 ஆம் தேதி 2020 - ல் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக நம்பிக்கை கொடுத்தார் ரஜினிகாந்த். ரசிகர்களும் தலைவர் கட்சி குறித்து அறிவித்து, இம்முறை சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் என காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் கொரோனா பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் இருந்த படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகடிவ் என வந்த போதிலும் ரத்த அழுத்தத்தில் மாறுதல் இருந்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?