தளபதி 65 படத்தில் விஜய்யுடன் ஜோடி போடப்போவது இவரா? இரண்டாவது படத்திலேயே அடித்த ஜாக்பாட்!
'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65 ஆவது படத்திற்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவல் கசிந்துள்ளது.
விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை அறிவிக்கும் விதமாக சன் பிச்சர் நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது,. அதில் கலாநிதிமாறனுடன், விஜய் பேசி கொண்டு வருவது போலவும், இதை அடுத்து நெல்சன் திலிப் குமார் பேசுவது போலவும். பின்னர் தோட்ட தெறிக்க... கார் பறக்கும்... அனிமேஷன் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படும் நிலையில், அவ்வப்போது இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளவர் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.
தற்போது கசிந்துள்ள தகவலின் படி, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹேக்டே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு, மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ள நடிகை பூஜா ஹேக்டே, தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். ஒருவேளை தளபதி 65 ஆவது படத்தில் இவர் இணைந்தால், தமிழில் இவர் நடிக்கும் இரண்டாவது படத்திலேயே இது இவருக்கு அடித்த ஜாக்போட் வாய்ப்பாகவே இது பார்க்கப்படும்.