- Home
- Cinema
- ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ல சமந்தா ரோலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? - விக்கி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ல சமந்தா ரோலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? - விக்கி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்
Kaathuvaakula Rendu Kaadhal : முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய்சேதுபதியை வைத்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் மூலம் தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகாமல் இருந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார்.
முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். நடிகை சமந்தாவின் பிறந்தநாளான இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பிரபல நடிகை நடிக்க இருந்ததை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நானும் ரவுடி தான் படத்திற்கு முன்னதாகவே இப்படத்தின் கதையை தயார் செய்துவிட்டதாகவும், விஜய் சேதுபதியை மனதில் வைத்து தான் இதன் கதையை எழுதியதாகவும் கூறினார். முதலில் இப்படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், சில காரணங்களால் அது கைகூடாமல் போனதால் சமந்தாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal Review : காத்துவாக்குல ரெண்டு காதல் சக்சஸ் ஆனதா? இல்லையா?- டுவிட்டர் விமர்சனம் இதோ