vignesh shivan : நயன்தாராவின் செல்லப்பெயர்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது
Nayanthara vignesh shivan wedding : இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவை இதுவரை என்னென்ன செல்லப்பெயர்களில் அழைத்தார் என்கிற விவரத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால், விருந்தினர்கள் திருமணம் நடைபெறும் இடத்தில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்களது திருமண புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நேற்று மதியம் 3 மணியளவில் வரிசையாக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அதில் நடிகை நயன்தாரா சிகப்பு நிற சேலையில் தேவதையாய் ஜொலித்தார். இருவருக்கும் இடையேயான பொறுத்தம் நச்சுனு இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்ததோடு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவை இதுவரை என்னென்ன செல்லப்பெயர்களில் அழைத்தார் என்கிற விவரத்தை அவரே வெளியிட்டுள்ளார். அதன்படி முதலில் மேடம் என அழைத்ததாகவும், பின்னர் அது காதம்பரி... தங்கமே... மை பேபி... மை உயிர்... கண்மணி என நீளும் அந்த பட்டியலில் தற்போது எனது மனைவி என குறிப்பிட்டுள்ளார் விக்கி.
இதையும் படியுங்கள்... Nayanthara Wedding : முத்தமழை பொழிந்த காதல் ஜோடி... வைரலாகும் நயன் - விக்கியின் திருமண புகைப்படம்