- Home
- Cinema
- Nayanthara Press Meet : ஹனிமூன் எங்கே?... பிரஸ் மீட்டில் வெட்கத்துடன் விக்கி - நயன் ஜோடி சொன்ன பதில்
Nayanthara Press Meet : ஹனிமூன் எங்கே?... பிரஸ் மீட்டில் வெட்கத்துடன் விக்கி - நயன் ஜோடி சொன்ன பதில்
Nayanthara Press Meet : பத்திரிக்கையாளர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, அதன்பின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்டனர்.

சுந்தர் சி - குஷ்பு, ரோஜா - செல்வமணி, தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி என சினிமாவில் இணைந்து பணியாற்றி பின்னர் காதல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் லிஸ்ட்டில் புதிதாக இணைந்துள்ள ஜோடி என்றால் அது விக்கி - நயன் தான். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டது.
இவர்களது திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அட்லீ, மோகன் ராஜா, சிறுத்தை சிவா, ஹரி, நடிகைகள் ராதிகா, ஷாலினி, ரெபா மோனிகா, டிடி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் கலந்துகொண்டது.
திருமணத்தை வெற்றிகரமாக முடித்த இந்த ஜோடி நேற்று ஜோடியாக திருப்பதிக்கு சென்றிருந்தது. அங்கு ஏழுமலையான் கோவில் முன்பு இருவரும் ஜோடியாக போட்டோஷூட்டும் நடத்தினர். இதையடுத்து சென்னை திரும்பிய விக்கி - நயன் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் ஜோடியாக கலந்துகொண்ட இருவரும் பத்திரிக்கையாளர்கள் முன் பேசுகையில், தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அருகில் இருந்த நிருபர் ஒருவர் திடீரென, ஹனிமூன் எங்க போகப் போறீங்க என கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டதும் இருவரும் வெட்கப்பட்டு சிரித்தபடி, கண்டிப்பா போவோம் என சொல்லிவிட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்... கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த நபர்... திரும்பி ‘என்னடா’னு எகிறிய நயன்தாரா - திருப்பதியில் திடுக் சம்பவம்