மீண்டும் துவங்கும் விடுதலை...விரைவில் வெளியிட திட்டம்..
சூரி, விஜய்சேதுபதி இணைந்துள்ள விடுதலை படத்திற்காக பிரமாண்ட செட்டப் இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

viduthalai shooting spoot
வித்யாசமான கதை களத்தை கொடுத்து வரும் வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார்.
viduthalai
முன்னணி நாயகர்களின் நண்பனாக வந்து ரசிகர்களை கவர்ந்த வந்த சூரி..விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
viduthalai
சூரி போலீஸாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஜெய்பீம் தமிழ் உள்ளிட்ட பிரபலங்கள் வந்துள்ளனர்.
viduthalai
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
viduthalai
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் அனைத்தும் மாஸாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
viduthalai
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆகியும் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. கடந்த ஜனவரிக்கு பிறகு நீண்ட இடைவேளையில் இருக்கிறது விடுதலை.
viduthalai
இந்நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 28-ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சென்னைக்கு அருகிலும், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கிராமம் போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்கிறது.