இது சரிப்பட்டு வராது... விடாமுயற்சிக்கு குட் பாய் சொல்லிட்டு விருட்டென கிளம்பிய அஜித் - ஷாக் ஆன ரசிகர்கள்
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
ajith
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்டு, இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம். மற்ற நடிகர்களைக் காட்டிலும் அஜித் சற்று வித்தியாசமானவர். படங்களின் நடிப்பதோடு சரி, அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலோ, விருது விழாக்களிலோ தலைகாட்டுவதே இல்லை. இருந்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் பெருகிக் கொண்டே தான் செல்கிறது.
Ajith
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் கடந்த மே மாதமே அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் இதுவரை இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை.
இதையும் படியுங்கள்... பாக்யா முதல் கண்ணம்மா வரை... விஜய் டிவி சீரியல் நடிகைகளின் வியக்க வைக்கும் சம்பள விவரம் - முதலிடத்தில் இவரா?
விடாமுயற்சி இப்போ... அப்போனு இழுத்தடித்து வந்த படக்குழு, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கண்டிப்பாக ஷூட்டிங்கை தொடங்கிவிடும் என கூறப்பட்டு வந்தது. இதனால் அஜித் ரசிகர்களும் குஷியில் இருந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் அஜித். அது என்னவென்றால், அவர் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.
ajith
ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் தற்போது அஜித் உலக பைக் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா என சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித் தற்போது உலக பைக் சுற்றுலா சென்றுள்ளதை பார்த்தால், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்பதுபோல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... திருமண அறிவிப்பை வெளியிட்ட கவின்... முன்னாள் காதலி லாஸ்லியாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?