பைக் ரேஸ்லாம் செட் ஆகாது... தனி ரூட்டில் அஜித் மகன்! குட்டி தல ஆத்விக்கின் திறமை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்
நடிகர் அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் மகனான ஆத்விக்கின் திறமையை பார்த்து வியந்துபோன ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், சினிமாவை போல் பைக் ரைடிங்கிலும் அதீத ஆர்வம் செலுத்தி வருகிறார். பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பது தான் அஜித்தின் நீண்ட நாள் ஆசை, தற்போது அவரின் அந்த ஆசை படிப்படியாக நிறைவேறி வருகிறது. கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், தன் உலக சுற்றுலாவின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் இதுவரை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள அஜித், தனது அடுத்தக்கட்ட பைக் சுற்றுலாவை இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தான் தன் உலக சுற்றுலாவை தொடர அஜித் திட்டமிட்டு இருக்கிறார். தற்போது அப்படத்திற்காக தயாராகி வருகிறார் அஜித்.
இதையும் படியுங்கள்... லவ் பண்றீங்களா?... இல்லையா? அதிதி பற்றிய கேள்வியால் கடுப்பான சித்தார்த் - காதல் குறித்து அளித்த காட்டமான பதில்
அஜித் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், அவரது மகன் ஆத்விக் தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கும் ஆத்விக், தற்போது புகழ்பெற்ற சென்னையின் எஃப்.சி அணியின் யூத் டீமிற்காக களமிறங்கி விளையாடி உள்ளார். அவர் கால்பந்து விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆத்விக் கால்பந்து விளையாடியதை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ அவர் ரொனால்டோ போல் ஸ்டைலாக கால்பந்து விளையாடுவதாக பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப் சி அணியின் ஜெர்சி அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... கேன்சர் நோயாளிகளுக்காக விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு! இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் இதுவா?