50 வருசமா சாப்பாடே சாப்பிடாமல் இருக்கேன்? அதிர்ச்சி கொடுத்த பழம்பெரும் நடிகை விஜயகுமாரி!
பழம்பெரும் நடிகையான விஜயகுமாரி சுமார் 50 வருடங்களாக, சாப்பாடே சாப்பிடாமல் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 வருடங்களாக சாப்பாடு சாப்பிடால் இருக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஏராளமான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை விஜயகுமாரி. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையத்தில் இறந்த இவர். மோகனா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் விஜயகுமாரியாக மாறினார். இவருடைய முதல் படம் நால்வர். நடிப்பு மட்டுமின்றி டயலாக் டெலிவரிக்காகவும் நன்கு அறியப்பட்டார்.
முத்துராமன், ஏவிஎம் ராஜன், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், நாகேஷ், எம்.என். நம்பியார், எம்ஜிஆர், ரவிச்சந்திரன், டிஎம் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சாரதா, அமுதா, குமுதம், நானும் ஒரு பெண், ஆலயமணி, பாத காணிக்கை, போலீஸ்காரன் மகள், கொடிமலர், பார் மகளே பார், பச்சை விளக்கு, ஆனந்தி, சாந்தி, தாயே உனக்காக, விவசாயி, கணவன் என்று ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
பூம்புகார் பட நடிகை விஜயகுமாரி
இவர் நடித்த பூம்புகார் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்திற்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய வசனம் இடம் பெற்றிருக்கிறது. அது நீளமான வசனம். அந்த வசனத்தை சி ஆர் விஜயகுமாரி சிறப்பாக பேசி அசத்தியிருகிகிறார்.
சினிமாவில் பிஸியான காலங்களில் எஸ் எஸ் ராஜேந்திரனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1961 முதல் 1973 ஆம் ஆண்டுகள் வரையில் 12 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அதன் பிறகு கணவரை பிரிந்தார். இவர்களுக்கு 1963 ஆம் ஆண்டு ரவிக்குமார் என்ற மகன் பிறந்தார். கணவரை பிரிந்த பிறகு இவர் கஷ்டத்தில் இருந்தபோது இவருக்கு எம்ஜிஆர் தான் பல உதவிகள் செய்தார்.
படத்துல தான் மனுஷன் அப்படி! நிஜத்தில் சொக்க தங்கம் - ஆனந்தராஜ் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்!
கணவரை விட்டு பிரிந்ததால் மீண்டும் நடிக்க துவங்கினார்
பின்னர் தன்னுடைய மகனை வளர்த்து ஆளாக்க, பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜயகுமாரி, கடைசியாக 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு என்ற படத்தில் நடித்திருந்தார். தளபதி விஜய் நடிப்பில் வந்த பூவே உனக்காக படத்தில் கூட சிஆர் விஜயகுமாரி நடித்திருக்கிறார். இந்த படத்தில் நம்பியாரின் மனைவியாக நடித்திருந்தார். தங்கமகன், நான் மகான் அல்ல, வசந்த ராகம், மாவீரன், பெரிய இடத்து பிள்ளை, அரண்மனை கிளி, பெரிய மருது, தர்ம சக்கரம், தெனாலி ஆகிய படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
1953 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்த நடிகை என்ற பெருமை இவர்க்கு உண்டு. இந்த நிலையில் தான் சமீபத்தில் விஜயகுமாரி பேசியது இப்போது வைரலாகி வருகிறது.
விஜயகுமாரின் உணவு பழக்கம்
கடந்த 50 வருங்களாக நான் சாப்பாடு சாப்பிடுவதே இல்லை என கூறியுள்ளார். நாள்தோறும் காலையில் 2 வேக வைத்த முட்டைகளை தான் சாப்பிடுவேன். தனியா, ஜவ்வரிசி, மிளகு, சீரகம் ஆகியவற்றை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் தோறும் அதை தான் குடிப்பேன்.
மதிய உணவாக ஒரு இட்லி, காய்கறி, மீன் குழம்பு என்று எடுத்துக் கொள்வேன். மதிய உணவிற்கு பிறகு ஆப்பிள் மற்றும் மாதுளை என்று பழங்கள் எடுத்துக் கொள்வேன். மாலையில் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவேன். இரவு நேரத்திற்கு ஒரு இட்லி சாப்பிடுவேன், இல்லையென்றால் தோசை சாப்பிடுவேன். 50 வருடங்களாக இதைத்தான் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
கணவர் அஜித்தின் 'விடாமுயற்சி'; FDFS ஷோ பார்த்த ஷாலினி! வைரலாகும் புகைப்படம்!