MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Chennai 28 Movie: 'சென்னை 600028' படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறது!

Chennai 28 Movie: 'சென்னை 600028' படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் தான் சென்னை 600028. இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில், ஜாலியாகவும் ஃபன்னாகவும் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் 3-ஆம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 06 2025, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இசைஞானி இளையராஜாவின், சகோதரர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த இவர், அதிரடியாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் தான் சென்னை 600028. இந்த படத்தை எஸ்.பி.பி சரண் தயாரித்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கமர்ஷியல் படமாக உருவான சென்னை 600028

கமர்ஷியல் படமாக உருவான சென்னை 600028

இளவட்ட ரசிகர்களை கவரும் விதமாக, கிரிக்கெட், காதல், காமெடி, என ஒரு கமர்ஷியல் படமாக உருவான இந்த படத்தில், மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ஜெய், பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படி பெயர் வச்சா எவனும் படத்த வாங்க மாட்டான்... வெங்கட் பிரபு வைத்த பெயரை மாற்றிய வாலி - சென்னை 28 சீக்ரட்ஸ்

 

35
வசூல் ரீதியாக தனக்கு லாபத்தை பெற்று தரவில்லை:

வசூல் ரீதியாக தனக்கு லாபத்தை பெற்று தரவில்லை:

சென்னை 600028 திரைப்படம் வெங்கட் பிரபுவை ஒரு வெற்றிப்பட இயக்குனராக பார்க்க வைத்தது மட்டும் இன்றி, இந்த படத்தில் நடித்த சிவா, ஜெய், விஜயலட்சுமி, நிதின் சத்யா, பிரேம்ஜி உள்பட பலருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சென்னை 28 திரைப்படம், சிறந்த படத்திற்காக தமிழக அரசின் விருதையும் சரணுக்கு பெற்று தந்தது. ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாக இது ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக தனக்கு லாபத்தை பெற்று தரவில்லை என, சரண் கூறி இருந்தார்.

45
சென்னை 600028 இரண்டாம் பாகம் 2016-ஆம் ஆண்டு வெளியானது

சென்னை 600028 இரண்டாம் பாகம் 2016-ஆம் ஆண்டு வெளியானது

இந்த படத்தின் முதல் பாகம் 2007-ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2016-ஆம் ஆண்டு வெளியானது. இதில், முதல் பாகத்தில் நடித்திருந்த நச்சத்திரங்கள் நடித்திருந்தாலும் இந்த நடிகர்களுக்கு மனைவியாக சில நடிகைகளும் நடித்திருந்தனர். ஜெய்யின் திருமணத்தை முன்வைத்து தான் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. 

 

55
சென்னை 600028 திரைப்படத்தின் 3-ஆம் பாகம்

சென்னை 600028 திரைப்படத்தின் 3-ஆம் பாகம்

இதை தொடர்ந்து தற்போது சென்னை 600028 திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தை எடுக்கும் முடிவில் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து, தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை இரண்டாம் பாகம் உருவாகும் பச்சத்தில், முதல் பாகத்தில் நடித்த பிரபலங்களை வைத்தே இந்த பாகம் எடுக்கப்படுமா? அல்லது புதிய நடிகைகளை இறக்கி தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாப்போல் ஒரு கதையை இயக்குவாரா? வெங்கட் பிரபு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved