- Home
- Cinema
- சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ லான்சுக்கு தயாராகும் பிரம்மாண்ட செட்- இதன் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா
சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ லான்சுக்கு தயாராகும் பிரம்மாண்ட செட்- இதன் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா
Vendhu Thaninthadhu Kaadu : செப்டம்பர் 2-ந் தேதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
சிம்புவும், கவுதம் மேனனும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அசுரன் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் அடிச்சு தூக்கிய திருச்சிற்றம்பலம்... தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி
அதன்படி இதுவரை இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் பாடிய மறக்குமா நெஞ்சம் என்கிற பாடல் வேறலெவல் வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க உள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 2-ந் தேதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மட்டும் படக்குழு ரூ.3 கோடி செலவழித்துள்ளதாம். இவ்விழா நடைபெற உள்ள பிரம்மாண்ட செட்டின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.