MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமே விவாகரத்து பயம் தான்... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிம்பு

திருமணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமே விவாகரத்து பயம் தான்... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிம்பு

Silambarasan TR : வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியக உள்ள நடிகர் சிம்பு, சமீபத்திய பேட்டியில் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணத்தை ஓப்பனாக சொல்லி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 11 2022, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு, தற்போது வயது 39 ஆகிறது. இருப்பினும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சிம்பு. இதில் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை சிம்பு உருகி உருகி காதலித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார்.

23

தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... தாறுமாறு சாதனை செய்த சூர்யாவின் மோஷன் போஸ்டர்..! சும்மா அதிர விடும் ரசிகர்கள்.!

இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு, சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வ்ருகின்றன. நான் அவரை காதலிக்கிறேன், இவரை திருமணம் செஞ்சுகிட்டேன் என்றெல்லாம் கூட பரப்புகிறார்கள். 

33

நான் 19 வயசுல இருந்தே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது. 

அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என்று பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்கிற பயத்தால்தான் நான் திருமணத்தை தள்ளிப்போடுகிறேன். எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என்று நான் முடிவு பண்ணிருக்கேன்” என சிம்பு கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... இதுவே முதல் முறை...! நயன்தாராவுக்காக விக்கி இப்படி இறங்கிட்டாரே பாஸ்..! வைரல் போஸ்ட்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image2
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image3
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved