- Home
- Cinema
- Vasundhara Kashyap: நடிகை என்பதை தாண்டி புது அவதாரம் எடுத்த கங்குவா நடிகை வசுந்தரா காஷ்யப்!
Vasundhara Kashyap: நடிகை என்பதை தாண்டி புது அவதாரம் எடுத்த கங்குவா நடிகை வசுந்தரா காஷ்யப்!
சினிமாவில் போதுமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் நடிகை வசுந்தரா காஷ்யப் இப்போது எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை வசுந்தரா காஷ்யப். இவருடைய அப்பா தமிழ பேசக் கூடியவர். அம்மா மராத்தி பேசக் கூடியவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மாடலிங் மீது ஆர்வம் கொண்ட வசுந்தரா மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் கிரியேட்டிவிட்டி பட்டம் வென்றார்.
மாடலிங் மூலம் சினிமா உள்ளே வந்த வசுந்தரா
இதையடுத்து அவர் மாடலிங் துறையில் இருந்த இவரை, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி தான். இந்தப் படத்தைத் தொடர்ந்து உன்னாலே உன்னாலே, களைப்பணி, ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது, கண்ணே கலைமானே, கண்ணை நம்பாதே, மாடர்ன் லவ் சென்னை என்று பல படங்களில் நடித்தார். கடைசியாக கங்குவா படத்திலும் நடித்திருந்தார்.
திருப்புமுனையை ஏற்படுத்திய தென்மேற்கு பருவக்காற்று
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஹோம்லி லுக் கொண்ட வசுந்தரா பெரும்பாலும் கிராமத்துக் கதைகளில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் வந்த படங்களில் பேராண்மை படம் தான் நல்லவொரு அடையாளத்தை கொடுத்தது. 2006 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் வசுந்தரா கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.
சம்மரில் சில் பண்ணும் நடிகை வசுந்தரா காஷ்யப்.. க்யூட் போட்டோஸ் இதோ..
எழுத்தாளராக அவதாரம் எடுக்கும் வசுந்தரா
தற்போது போதுமான அளவில் பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். ஆம், அவர் இப்போது எழுத்தாளராக மாறியுள்ளார். தி அக்கியூஸ்ட்" (The Accused) என்ற பெயரில் ஒரு கிரைம் நாவலை அவர் எழுதியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்ம கொலையை மையப்படுத்தி தி அக்கியூஸ்ட் என்ற நாவலை அவர் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை என்பதை தாண்டி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள இவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.