தளபதி விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் எப்ப ரிலீஸ் தெரியுமா?
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Vijay
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இதன் மூலம் தெலுங்கு திரை உலகிற்கு அறிமுகம் ஆகிறார் விஜய்.
இந்த படத்தில் தெலுங்கு நாயகி ரஷ்மிகா மந்தனா நாயகியாக இருக்கிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இரண்டு அண்ணன்களின் தம்பியாக வரும் நாயகன் வெளிநாட்டிலிருந்து திரும்புவார் என முன்னதாக வெளியாகி இருந்த போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
Varisu
ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினத்தை தொடர்ந்து தற்போது இதன் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று பர்ஸ்ட் லுக் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அதோடு அஜித் குமாரின் துணிவு படத்திற்கு போட்டியாக வரும் பொங்கல் அன்று வாரிசு படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
varisu
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் ஒவ்வொன்றாக வசித்து வருகிறது. முன்னதாக தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தமிழ் மற்றும் நடன இயக்குனர் ஜானி உள்ளிட்டோர் விஜயின் ஃபயர் நடனத்தை காண காத்திரங்கள் எனக் கூறி ஆர்வத்தை தூண்டி இருந்தனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.