பச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் !
வனிதா தற்போது மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ள 'பிக்பாஸ் ஜோடி' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்த வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களை விட வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக, பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு இவர் ஆட்டம் போல சில போட்டோசை இவர் வெளியிட, நெட்டிசன்கள் செம்மையாக கலாய்த்து வருகிறார்கள்.
பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு, தற்போது வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது.
இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடந்து முடிந்ததை இவரே சுமூக வலைத்தளத்தில் உறுதி செய்திருந்தார்.
பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ்க்கையை ஆரம்பித்த வனிதா அதேவேகத்தில் முடித்துக் கொண்டார். வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் பிரச்சனை செய்தார். அதன் பின்னர் சென்னை திரும்பிய பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'பாம்பு சட்டை' என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்ததாக படம் ஒன்றை இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இவர் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த தகவலும் வெளியானது.
கோல்ட் மேன் ஹரி நாடார் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். '2K அழகானது காதல்’ என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜையிலும் வனிதா கலந்து கொண்டு இந்த தகவலை உறுதி செய்தார்.
மேலும் பிரஷாந்த், அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் அந்தகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைய செய்து, குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என... அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து வனிதாவின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பிடித்த விஜய் டிவியில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
பிக்பாஸ் ஜோடி என்கிற நிகழ்ச்சியில் வனிதா நடனமாட உள்ளார். இவர் சும்மா வெள்ளை கோட் ஷர்ட்டில்... கையில் செம்ம கெத்தாக துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு டான்ஸ் ஆடியுள்ளார்.
அவரது ஆட்டம் , மேக் அப் எல்லாமே ஓகே ஆனால் அவரது லிப்ஸ்டிக் தான் படு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இவர் தன்னை வித்தியாச படுத்தி காட்டிக்கொள்ள போட்டு கொண்ட பச்சை கலர் லிப்ஸ்டிக் சுத்தமாக நன்றாக இல்லை என நெட்டிசன்கள் இவரை வச்சி செய்து வருகிறார்கள்.
எவ்வளவு தான் கவனமா இருந்தாலும்... வாண்டடா போய் சில சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார் வனிதா.