அடக்கடவுளே..வலிமை மவுசு குறைஞ்சிருச்சா?..வசூல் சறுக்களால் புலம்பும் போனி கபூர்..
கடந்த வியாழக்கிழமை வெளியாகி மாஸ் காட்டி வந்த அஜித்தின் வலிமை படத்தின் வசூல் 5 -ம் நாளில் மிக குறைந்துள்ளது..

valimai
போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
valimai
இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷியும், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.
valimai
யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
valimai
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.
valimai
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
valimai
படம் வெளியாகி மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது. இதனை நடிகை, ஹூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
valimai
முதல் நாளில் 36.17 கோடி ரூபாய் வசூலை வலிமை திரைப்படம் அள்ளி மற்ற தமிழ் சினிமா படங்கள் இதுவரை செய்திருந்த ரெக்கார்ட்டுகளை காலி செய்தது. இரண்டாம் நாளில் 24.62 கோடியும், 3ம் நாளில் 23 கோடியும், 4ம் நாளான ஞாயிற்றுக்கிழமை 30 கோடி ரூபாய் வசூலையும் அள்ளி உள்ளது வலிமை.
valimai
ஆனால் நேற்று அதாவது திங்கட்கிழமையான வலிமை படத்தின் வசூல் மிகவும் குறைந்துள்ளது...வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலாக கிட்டியுள்ளது..5 வது நாளே வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது படக்குழு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..