- Home
- Cinema
- Valimai Stills : தல டக்கர் டோய்.... ஸ்மார்ட் லுக்கில் ‘வலிமை’ அஜித் - ரசிகர்களை மெர்சலாக்கிய ஸ்டைலிஷ் போட்டோஸ்
Valimai Stills : தல டக்கர் டோய்.... ஸ்மார்ட் லுக்கில் ‘வலிமை’ அஜித் - ரசிகர்களை மெர்சலாக்கிய ஸ்டைலிஷ் போட்டோஸ்
வலிமை (Valimai) படத்தில் நடித்துள்ள நடிகர் அஜித்தின் (Ajith) ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.
இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐய்யப்பா நடித்துள்ளார். அமராவதி படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த பானு பிரகாஷின் மகன் தான் ராஜூ ஐயப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அஜித்திவலிமை (Valimai) திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், வலிமை அஜித்தின் விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அஜித்கும மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.