MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Valimai BoxOffice : தல டக்கர் டோய்... ஒரே நாளில் மாஸ்டர், அண்ணாத்த பட சாதனையை அடிச்சு துவம்சம் செய்த வலிமை

Valimai BoxOffice : தல டக்கர் டோய்... ஒரே நாளில் மாஸ்டர், அண்ணாத்த பட சாதனையை அடிச்சு துவம்சம் செய்த வலிமை

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Feb 25 2022, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து திரையுலகம் கடும் இழப்பை சந்தித்து வந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள் ரிலீசாகாமல் தேங்கிக் கிடந்தன. சில படங்கள் மட்டுமே நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டன.

26

பின்னர் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டபோதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் திரையரங்குகளில் படம் பார்க்க தயக்கம் காட்டினர். இவ்வாறு களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரிலீசானது தான் விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம். இப்படம் கடந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.

36

இதையடுத்து திரையுலகம் படிப்படியாக மீண்டு வந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை பரவியதால் மீண்டும் திரையரங்குகளை மூடும் சூழல் உருவானது. பின்னர் செப்டம்பர் மாதம் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 

46

பின்னர் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த (Annatthe) திரைப்படம் வெளியானபோது தான் திரையரங்குகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஃபேமிலி ஆடியன்சுக்கு இப்படம் பிடித்திருந்ததால் வசூலில் சோடை போகாமல் டஃப் கொடுத்தது அண்ணாத்த.

56

இதனிடையே கடந்த மாதம் கொரோனா மூன்றாவது அலை பரவியதன் காரணமாக அஜித்தின் வலிமை (Valimai) திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. தற்போது கொரோனா பரவல் குறைந்து திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்த நிலையில், வலிமை படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது.
 

66

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி வலிமை (Valimai) திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.82 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலுக்கு பின் வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் 1.21 கோடியும், ரஜினியின் அண்ணாத்த 1.71 கோடியும் சென்னையில் வசூலித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இதையும் படியுங்கள்.... Valimai Movie :என்ன இப்படி ஆயிருச்சு... முதல் நாளே வலிமைக்கு காத்திருந்த அதிர்ச்சி- அப்போ கலெக்‌ஷன் அவ்ளோதானா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved