MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எவ்ளோ நேக்கா காப்பி அடிச்சிருக்காரு பாருங்க; ஒரே வரியை 2 பாடல்களில் பயன்படுத்திய வைரமுத்து!

எவ்ளோ நேக்கா காப்பி அடிச்சிருக்காரு பாருங்க; ஒரே வரியை 2 பாடல்களில் பயன்படுத்திய வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து ஒரே பாடல் வரியை இரண்டு பட பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார், அது என்னென்ன பாடல்கள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 31 2024, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vairamuthu used same lyrics for 2 Songs

Vairamuthu used same lyrics for 2 Songs

கவிஞர் வைரமுத்து, தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட வைரமுத்து இளையராஜா உடன் குறுகிய காலம் பணியாற்றினாலும் அவர் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். சூப்பர்ஹிட் காம்போவாக இருவரும் திகழ்ந்து வந்த நிலையில், திடீரென சண்டை போட்டு பிரிந்தனர். இளையராஜாவை பிரிந்த பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதினார் வைரமுத்து.

24
Vairamuthu

Vairamuthu

வைரமுத்து 7 முறை தேசிய விருதை வாங்கி இருக்கிறார். முதல் மரியாதை படத்துக்காக தான் அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கிய ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், பாரதிராஜாவின் கருத்தம்மா, சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்கு பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து வென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டி யுவன் சங்கர் ராஜா! இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

34
Amarkalam movie Song

Amarkalam movie Song

இத்தகைய சாதனைக் கலைஞனாக வலம் வரும் வைரமுத்து தான் எழுதிய ஒரே பாடல் வரியை 2 பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். வைரமுத்து கடந்த 1999-ம் ஆண்டு அஜித், ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படத்திற்காக எழுதிய பாடல் வரியை கடந்த 2015-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓ காதல் கண்மணி படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.

44
OK Kanmani Song

OK Kanmani Song

அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் வரும் ‘பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே... என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்’ என்கிற வரியை எழுதிய வைரமுத்து அதே வரியில் பெண்ணே என்பதற்கு பதிலாக கண்ணே என மாற்றி ஏ.ஆ.ரகுமான் இசையமைத்த ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற தீரா உலா பாடலிலும் பயன்படுத்தி இருப்பார். இந்த வரிகள் இடம்பெற்ற அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  கேரவனில் கேமரா; எல்லா நடிகைகளுடைய டிரஸ் மாத்துற வீடியோ வச்சிருக்காங்க - ராதிகா சொன்ன பகீர் சம்பவம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Recommended image2
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved