MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உன்னிகிருஷ்ணன் மகனுக்கு திருமணம்; மணமக்களை வாழ்த்திய வைரமுத்து!

உன்னிகிருஷ்ணன் மகனுக்கு திருமணம்; மணமக்களை வாழ்த்திய வைரமுத்து!

உன்னிகிருஷ்ணன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து மணமக்களை வாழ்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 01 2025, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உன்னி கிருஷ்ணன்:

உன்னி கிருஷ்ணன்:

கேரளா மாநிலம் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் ஒரு கர்னாட்டிக் இசை பாடகர். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். காதலன் படத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் 'என்னவளே அடி என்னவளே' என் இவர் பாடிய பாடல் இன்று வரை காதலர்களின் ஃபேவரட் பாடலாக உள்ளது.
 

25
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது

தன்னுடைய முதல் பாடலிலேயே இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  அதே போல் 2ஆவது படமான பவித்ரா என்ற படத்தில் இடம் பெற்ற உயிரும் நீயே என்ற சோலோ பாடலை பாடி சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றார். இளையராஜா, வித்யாசகர், ஏ ஆர் ரஹ்மான், எம் எம் கீரவாணி, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ், பரத்வாஜ் என்று ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். 

'என் இனிய பொன் நிலாவே' பாடல்; மகனால் இளையராஜாவுக்கு வந்த சிக்கல்? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
 

35
வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன்

வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன்

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் உன்னிகிருஷ்ணனின் மகனுக்கு இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. உன்னி கிருஷ்ணனுக்கு வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் என்று ஒரு மகனும், மகளும் உள்ளனர். அப்பாவை போல் இவருடைய மகளும் இசை துறையை தேர்வு செய்து இளம் பின்னணி பாடகியாக மாறியுள்ளார்.

45
கிருஷ்ணாவுக்கும் - உத்ரா திருமணம்

கிருஷ்ணாவுக்கும் - உத்ரா திருமணம்

இந்நிலையில் உன்னி கிருஷ்ணனின் மகன், வாசுதேவ் கிருஷ்ணாவுக்கும் -  உத்ரா என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட பல பிரபலங்கள்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் உன்னிகிருஷ்ணனின் மகளின் பெயரும், மருமகளின் பெயரும் ஒரே பெயர் என்பது தான்.

2024 தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டு; இத்தனை கோடி நஷ்டமா? ஷாக்கிங் ரிப்போர்ட்!

55
வைரமுத்து நேரில் வாழ்த்து:

வைரமுத்து நேரில் வாழ்த்து:

உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாடகர் உன்னி கிருஷ்ணன் இல்ல திருமணம். மணமக்கள் வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா. நான் எழுதிய ஒரு பாட்டுக்கு தேசிய விருதை அவர் பெற்றார். அவர் பாடிய என் பாட்டுக்கு தேசிய விருதை நான் பெற்றேன். உள்ளங்கவர் பாடகர் குடும்பத்தை உள்ளன்போடு வாழ்த்தினேன் என்று கூறி என்னவளே அடி என்னவளே என்ற பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved