இப்படி ஒரு வடிவேலுவை பார்த்ததே இல்லையே..! மாமன்னன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
உதயநிதி அரசியலுக்குள் நுழைந்துவிட்டதால் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் அவரின் கடைசி திரைப்படமாக மாமன்னன் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து உள்ளார். மாமன்னன் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கும் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடிகர் சமுத்திரக்கனி குடும்பத்துடன் சாமி தரிசனம்
இதனிடையே மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. அவர்கள் அறிவித்தபடி நாளை ரிலீஸாக இருந்த மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவே இணையத்தில் லீக் ஆகி விட்டதால், படக்குழுவும் வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துவிட்டனர்.
அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ப்ரைஸாகவே உள்ளது. அதில் ஒருபுறம் உதயநிதி கையில் வாள் உடன் அமர்ந்திருக்க,அ அவர் அருகில் வடிவேலு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து, கையில் துப்பாக்கி உடன் டெரராக போஸ் கொடுத்தபடி அமர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், இதுவரை வடிவேலுவை இப்படி ஒரு லுக்கில் பார்த்ததே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டரை பார்க்கும் போதே படத்தில் வடிவேலுவை மாரி செல்வராஜ் வேறலெவலில் மாற்றி இருக்கிறார் என்பது தெரிகிறது. இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... அட்டர் பிளாப் ஆன சாகுந்தலம்... 25 வருட கெரியரில் இவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்தித்ததில்லை என புலம்பிய தில் ராஜு