- Home
- Cinema
- சமந்தா வெளியிட்ட கீர்த்தியின் பர்ஸ்ட் லுக்..அக்கா தயாரிப்பில் வக்கீல் கோர்ட்டில் வேற லெவல் மாஸ் லுக்..
சமந்தா வெளியிட்ட கீர்த்தியின் பர்ஸ்ட் லுக்..அக்கா தயாரிப்பில் வக்கீல் கோர்ட்டில் வேற லெவல் மாஸ் லுக்..
தனது சகோதரியின் 34 வது படமான வாசி - யில் கீர்த்திசுரேஷ் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமந்தா வெளியிட்டுள்ளார்..

Keerthy suresh
நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
Keerthy suresh
அதே போல் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.
Keerthy suresh
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
keerthi suresh
அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.
keerthi suresh
இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். பின்னர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
keerthi suresh
சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அன்பு தங்கையாய் வந்து ரசிகர்ளை கவர்ந்திருந்த கீர்த்தி..தற்போது அவரது சகோதரி ரேவதியின் 34 வது தயாரிப்பில் நாயகியாக நடித்துள்ளார்..
Keerthy suresh
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். கதாநாயகி, கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார். இயக்குபவர், விஷ்ணு. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.
Keerthy suresh
இந்நிலையில் வாசி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.. கீர்த்திசுரேஷ் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக்கை சமந்தா வெளியிட்டுள்ளார்..