நயன்தாரா உள்பட எந்த ஹீரோயினிடமும் இல்லாத சொகுசு காரை வாங்கிய லெஜண்ட் பட நாயகி!
தி லெஜண்ட் திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்த ஊர்வசி ரவ்துலா விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சொந்தமாக வாங்கி இருக்கிறார்.

Urvashi Rautela New Car : தமிழில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் ஊர்வசி ரவ்துலா. இவர் இந்தியாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை செய்துள்ளார். அவங்க செஞ்ச இந்த விஷயம் எல்லா பக்கமும் பேசப்படுது. அது என்னவென்றால் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முதல் இந்திய நடிகை இவங்கதான். இந்த அல்ட்ரா சொகுசு காருக்காக ஊர்வசி ரவ்துலா 12 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் V12 இன்ஜினோட வந்து, அதோட சூப்பரான டிசைன் மற்றும் ராயல் இன்டீரியர்னால நிறைய பேரை கவர்ந்திழுக்குது.
Rolls Royce Cullinan
ஊர்வசி ரவ்துலா சமீபத்துல அவங்களோட இந்த சொகுசு காரோட வீடியோவை சோஷியல் மீடியால ஷேர் பண்ணிருக்காங்க. வீடியோவோட கேப்ஷன்ல வெறும் ரெட் ஹார்ட் எமோஜி மட்டும் போட்டுருக்காங்க. வீடியோல அழகான பிங்க் டிரஸ் போட்டுட்டு ஊர்வசி ரவ்துலா ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்ல இருந்து இறங்குறாங்க. ஸ்டேடியத்துல கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு, போட்டோகிராஃபர்ஸுக்கு போஸ் கொடுத்துட்டு, திரும்ப கார்ல ஏறி போறாங்க.
இதையும் படியுங்கள்... காஸ்ட்லியான கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லெஜன்ட் பட நாயகி... விலை ஜஸ்ட் 3 கோடி தான்..!
Urvashi Rautela Rolls Royce Car
ஊர்வசி ரவ்துலா அதிகாரப்பூர்வமா வரலாறு படைச்சுட்டாங்க. இந்தியால இவங்களுக்கு முன்னாடி எந்த நடிகையும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் வாங்குனது இல்ல. இந்த அல்ட்ரா சொகுசு SUV-க்கு சொந்தக்காரர் ஆகுற முதல் ஹீரோயின் இவங்கதான். ஆமா, சில நடிகர்கள் கிட்ட இந்த கார் இருக்கு. அதுல ஷாருக் கான், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், அல்லு அர்ஜுன்லாம் அடக்கம். தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் பிசினஸ் டைகூன் முகேஷ் அம்பானிகிட்டயும் இந்த அல்ட்ரா சொகுசு SUV இருக்கு.
Urvashi Rautela
கெரியரை பொறுத்தவரை, நடிகை ஊர்வசி ரவ்துலா கடைசியா 'டக்கு மகாராஜ்'ல நந்தமுரி பாலகிருஷ்ணாவோட ஸ்கிரீன் ஷேர் பண்ணி நடிச்சிருந்தாங்க. ரெண்டு பேரும் படத்துல 'தபிடி தபிடி' பாட்டுல டான்ஸ் ஆடினது வைரலாச்சு, அதுக்காக அவர் நிறைய விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஊர்வசி ரவ்துலா வரப்போற படங்கள்ல தெலுங்குல 'பிளாக் ரோஸ்' கூடவே ஹிந்தில 'வெல்கம் டு தி ஜங்கிள்' மற்றும் 'கசூர் 2' மாதிரியான படங்கள் இருக்கு.
இதையும் படியுங்கள்... நயன்தாராவும் இல்ல... திரிஷாவும் இல்ல; ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ‘அந்த’ நடிகை யார் தெரியுமா?