இன்னும் மூன்று படங்களில் இணையும் ரோலெக்ஸ் கூட்டணி.. அப்டேட் உள்ளே!
விக்ரம் வெற்றியை அடுத்து சூர்யா - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

vikram - suriya
நேற்று வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. ரோலெக்ஸ் என்ற பெயரில் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா வரும் காட்சிகள் வெறும் 5 நிமிடத்தில் ரசிகர்களின் மனதை மொத்தமாக வாரிக்கொண்டது. இது குறித்து சூர்யா டுவிட்டரில்; “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
irumbu kai mayavi
முன்னதாக சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணையும் 'இரும்பு கை மாயாவி' என்ற தலைப்பில் வரவிருக்கும் திட்டத்தில் இணைய உள்ளனர். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'விக்ரம்' ப்ரோமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரும்பு கை மாயாவி படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ஏற்கனவே செய்துவிட்டதாக தெரிவித்தார்.
suriya -lokesh kanagara
இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் 2 ஏற்கனவே கன்பார்ம் ஆகிவிட்டது. இதையடுத்து இரும்பு கை மாயாவி என இரு படங்கள் உறுதியாகிய நிலையில் தனது முதல் படமான மாநகரம் படத்தை முடித்த கையோடு லோகேஷ் சூர்யாவிடம் வேறொரு கதையை சொல்லியிருந்தாராம், ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்கமுடியாமல் போனதாம். இந்த படம் மீண்டும் உருவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.