MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவர் முதல் தளபதி வரை! பிரபலங்கள் புடைசூழ நடந்த ஜெயம் ரவி - ஆர்த்தி திருமணம்; வைரலாகும் Rare போட்டோஸ்

தலைவர் முதல் தளபதி வரை! பிரபலங்கள் புடைசூழ நடந்த ஜெயம் ரவி - ஆர்த்தி திருமணம்; வைரலாகும் Rare போட்டோஸ்

Jayam Ravi Aarthi Marriage Photos : நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டபோது எடுத்துக்கொண்ட வெட்டிங் கிளிக்ஸை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 09 2024, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரவி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக்கொண்டார் ரவி. ஜெயம் படத்திற்கு பின்னர் அவர் தொட்டதெல்லாம் சக்சஸ் ஆகவே அமைந்தது. குறிப்பாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

சினிமாவில் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வருபோதே நடிகர் ஜெயம் ரவிக்கு திருமணமும் ஆனது. அவர் கடந்த 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

29
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

ஜாலியாக சென்று கொண்டிருந்த ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடியின் திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை தங்களது திருமண முறிவு குறித்து அறிக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி.

தன்னை சார்ந்தவர்களின் நலன் கருதி இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் ஜெயம் ரவி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். 15 வருட திருமண வாழ்கைக்கு பின் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிற்கே பேரதிர்ச்சியாக உள்ளது.

39
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்யும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.

49
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒருவரும் ஜோடியாக வந்து ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த இரண்டு ஜோடியும் தற்போது விவாகரத்து செய்து பிரிந்துவிட்டது.

59
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

நடிகர் சூர்யாவும் அவரது சகோதரர் கார்த்தியும் ஒன்றாக வந்து ஜெயம் ரவியின் திருமணத்தில் கலந்துகொண்டனர். இதில் கார்த்தியும் ரவியும் நெருங்கிய தோழர்கள் ஆவர். இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... 15 வருட திருமண வாழ்க்கை முடிந்தது... மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்

69
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

திமுகவின் ஆட்சி காலத்தில் தான் ஜெயம் ரவியின் திருமணம் நடைபெற்றது. அப்போது அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

79
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், ஜெயம் ரவியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது எடுத்த புகைப்படம் இது. இந்த சமயத்தில் அவர் எந்திரன் படத்தை இயக்கி வந்தார்.

89
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

ஜெயம் ரவி திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார். வெள்ளை வேட்டி சட்டையில் முதல் ஆளாக வந்து மணமக்களை சூப்பர்ஸ்டார் வாழ்த்திய போது எடுத்த புகைப்படம் தான் இது.

99
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

ரஜினியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனும் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியின் திருமணத்தில் கலந்துகொண்டார். ஜெயம் ரவி ஹீரோவாகும் முன்னர் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது; ஜெயம் ரவி - ஆர்த்தியின் லவ் ஸ்டோரி எப்படிப்பட்டது தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Recommended image2
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image3
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved